பள்ளி கல்வித்துறை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களையும் அதிரடியாக கடந்த மாதம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய கணேஷ்மூர்த்தி பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு முருகன் அவர் பணியமர்த்தப்பட்டார்.

பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் முருகன் என்றாலே அதிரடியானவர் என்று அவர் பணியாற்றிய மாவட்ட ஆசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். தற்போது, கூடுதல் அதிரடிகளை சேலம் மாவட்டத்தில் அரங்கேற்றி வருகிறார். இவரது சிறப்பு எங்கு, எப்போது எந்த பள்ளியில் ஆய்வு நடத்துவார் என்று கூட இருப்பவர்க்கே தெரியாது என்று கூறுவார்கள். குறிப்பாக, மலை கிராம பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா, ஆரோக்கிமான உணவு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண்பது தனிசிறப்பு.

அந்த வகையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பிஆர்சி அலுவலகத்திற்கு நேரில் சென்ற முருகன், நீண்ட நேரமாக காத்திருந்தும் அங்குள்ள ஒரு அலுவலர் பணிக்கு வரவில்லை. மேலும், போன் செய்தும் எடுக்கவில்லை. இன்னொரு அலுவலர் மூலம் போன் செய்த போது, அந்த அலுவலர் அமரகுந்தி தொடக்கப்பள்ளியில் இருப்பதாக கூறியுள்ளார். உடனே அங்கு விசாரித்தபோது, அந்த அலுவலர் அங்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொய் கூறியுள்ளார் என தெரிந்ததும், அந்த அலுவலர்களுக்கு ஆப்சென்ட் போட்டுவிட்டு, ஞாயிறன்று பிஆர்சி அலுவலகத்தில் முழுநாள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதேபோன்று, பொலிவிழந்த பல அரசு மேல்நிலைப்பள்ளிகள் இவரது ஆய்வுக்குபின் ஜொலிக்கிறது என்றும், நிர்வாகம் சரியான முறையில் நகர்கிறது என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவரது நிர்வாக செயல்பாடுகளை வரவேற்கும் ஆசிரியர்கள், அதேசமயத்தில் ஆசிரியர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என என்றும் அவர்கள் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த முதன்மை கல்வி அலுவலர்களின் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்னவென்று கிழே உள்ள கமெண்ட் பாக்ஸி்ல் தொிவிக்கவும்.
ஒவ்வொரு பள்ளியிலும் அடிப்படை வசதிகளை ஒழுங்குபடுத்தி அதை பராமரிக்க ஆட்களை அவர்களே ஏற்பாடு செய்து தந்துவிட்டு இது போல விளம்பரங்களை பண்ணட்டும். எல்லா பள்ளிகளுக்கும் ஒரே தொகையை ஒதுக்கிவிட்டு எல்லா பள்ளிகளிலும் ஒரே மாதிரி பலன் எதிர்பார்ப்பது இவ்வகையில் ஞாயம். எங்கள் பகுதியில் ஒரு தூய்மை பணி செய்ய 1000 ரூபாய் கேட்கிறார்கள். அதுவே அதே வேலையை 200 ரூ பாயில் முடிக்கிறார்கள். அதற்கு பதிலாக அந்த சுற்று வட்டார பள்ளிகளுக்கு என ஒரு ஆளை போட்டு அவர்களே சம்பளம் கொடுத்து வேலை வாங்கினால் இன்னும் சிறப்பாக மாறும். அவர் அதை செக் செய்கிறேன் பேர்வழி என்று அவர் ஏறி பார்க்க அத்துணை பேர் உதவ வேண்டும். அவர் அதிகாரி. அதே வேலையை பள்ளியில் உள்ளவர்கள் செய்ய யாரும் உதவிக்கு ஆள் இல்லை. முதலில் இப்படி விளம்பரம் தேடுபவர்கள் வேலை செய்தால் அதன் அருமை புரியும். அவர்கள் அலுவலகங்களில் கூட ஏமாந்தவர்கள் தான் வேலை செய்து வைக்க வேண்டி இருக்கும். அங்கே என்றைக்காவது இப்படி பார்த்து இருப்பார்களா. இல்லை அவர்களுக்கு ஜால்ரா போட்டு வாழ்க்கை நடத்தி இப்படி விளம்பர படுத்துபவர்கள் தான் செய்வார்களா. களத்தில் இருப்பவர்களுக்கு அதன் அருமை புரியும்