You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பள்ளி ஆய்வுக்காக ஏணியில் ஏறிய முதன்மை கல்வி அலுவலர் - Exclusive Photos

CEO MURUGAN INSPECTION PHOTOS|||

பள்ளி கல்வித்துறை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களையும் அதிரடியாக கடந்த மாதம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய கணேஷ்மூர்த்தி பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு முருகன் அவர் பணியமர்த்தப்பட்டார்.

முதன்மை கல்வி அலுவலர் முருகன் தொலசம்பட்டி பள்ளியில் ஆய்வு செய்தபோது
பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் முருகன் என்றாலே அதிரடியானவர் என்று அவர் பணியாற்றிய மாவட்ட ஆசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். தற்போது, கூடுதல் அதிரடிகளை சேலம் மாவட்டத்தில் அரங்கேற்றி வருகிறார். இவரது சிறப்பு எங்கு, எப்போது எந்த பள்ளியில் ஆய்வு நடத்துவார் என்று கூட இருப்பவர்க்கே தெரியாது என்று கூறுவார்கள். குறிப்பாக, மலை கிராம பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா, ஆரோக்கிமான உணவு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண்பது தனிசிறப்பு.

முதன்மை கல்வி அலுவலர் முருகன் தொலசம்பட்டி பள்ளியில் ஆய்வு செய்தபோது
அந்த வகையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பிஆர்சி அலுவலகத்திற்கு நேரில் சென்ற முருகன், நீண்ட நேரமாக காத்திருந்தும் அங்குள்ள ஒரு அலுவலர் பணிக்கு வரவில்லை. மேலும், போன் செய்தும் எடுக்கவில்லை. இன்னொரு அலுவலர் மூலம் போன் செய்த போது, அந்த அலுவலர் அமரகுந்தி தொடக்கப்பள்ளியில் இருப்பதாக கூறியுள்ளார். உடனே அங்கு விசாரித்தபோது, அந்த அலுவலர் அங்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொய் கூறியுள்ளார் என தெரிந்ததும், அந்த அலுவலர்களுக்கு ஆப்சென்ட் போட்டுவிட்டு, ஞாயிறன்று பிஆர்சி அலுவலகத்தில் முழுநாள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதேபோன்று, பொலிவிழந்த பல அரசு மேல்நிலைப்பள்ளிகள் இவரது ஆய்வுக்குபின் ஜொலிக்கிறது என்றும், நிர்வாகம் சரியான முறையில் நகர்கிறது என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் முருகன் தொலசம்பட்டி பள்ளியில் ஆய்வு செய்தபோது
இவரது நிர்வாக செயல்பாடுகளை வரவேற்கும் ஆசிரியர்கள், அதேசமயத்தில் ஆசிரியர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என என்றும் அவர்கள் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த முதன்மை கல்வி அலுவலர்களின் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்னவென்று கிழே உள்ள கமெண்ட் பாக்ஸி்ல் தொிவிக்கவும்.