Chief Educational Officer Madan Kumar | சிஇஓவுக்கு சிக்கல் விசாரணைக்கு உத்தரவு
Chief Educational Officer Madan Kumar
புகாரின் அடிப்படையில், இணை இயக்குனர் (தனியார் பள்ளிகள்) க.சசிகலா திருப்த்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
Read Also: முதன்மை கல்வி அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, திருப்பத்தூர் மாவட்ட கல்வித்துறை அனைத்து பணியாளர்கள், திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் இரா.மதன்குமார் அவர்கள் மீது புகார் மனு அளித்துள்ளனர். இப்புகார் மனுவின் மீது துறை ரீதியான ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ள, விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்டது. புகார் மனு விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் புகார் மனுதாரர்கள் 16.11.2022 அன்று விசாரணை அலுவலரான தனியார் பள்ளிகள் இணை இயக்குனர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம், சென்னை அவர்களின் முன்னிலையில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.