Chief educational Officer Arrested by DVAC | விருதுநகர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கைது?
Chief educational Officer Arrested by DVAC
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முதன்மை ராமன் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளதாக வௌியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றவர் ராமன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணிமாறுதல் போது, இவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் மாவட்ட முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் அளிப்பதற்காக ஒவ்வொரு பணியிடத்திற்கும் தலா ரூ 8 லட்சம் வீதம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இதனால் பல ஆசிரியர்கள் அவர் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் ஒரு ஆசிரியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரில் இதுதொடர்பாக புகார் அளித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பணி மாறுதல் காரணமாக, இவருக்கு அலுவலகம் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அங்கு வந்தனர். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆசிரியர்களிடம் வழங்கி அவரிடம் அந்த பணத்தை வழங்க ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மறைந்திறந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் பணம் பெறும் கையும் களவுமாக பிடித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் நேரடி நியமனத்தில் பணி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.