You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

குரூப் 4 பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பரிசீலிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

kattavoor school protest

குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருச்சியை சேர்ந்த சதிஷ்குமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, 2020ஆம் ஆண்டு 135 சமையல் கலைஞர்கள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. தகுதிகளாக, பத்தாம் வகுப்பு தோல்வி, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி 2021ல் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், திடீரென அதிக கல்வித்தகுதி இருப்பதாக கூறி, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சதிஷ்குமார் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

வழக்கை விசாரித்த நீதிபதி, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதை அதிக கல்வித்தகுதியாக கருத முடியாது. அதனால், அதிக கல்வித்தகுதியுடன் விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்துக்கான சிறப்பு விதிகளின்படி அதிக வயதுடையவர்களை பணியில் நியமிக்கலாம் என்ற உத்தரவு சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படுகிறது. 

அவ்வாறு பணியில் நியமிக்கப்பட்டிருந்தால், அது சட்டவிரோதமாக கருதப்படும். தொடர்ந்து பணியில் நீட்டிக்கவும் உரிமை இல்லை. தமிழக அரசு குரூப் பணியிடங்களுக்கான குறைந்த மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணியிக்க வேண்டும். விரைவாக நடவடிக்கை எடுப்பதன் மூலமாக புறக்கணிப்பு மற்றும் சமவாய்ப்பு மறுக்கப்படுவது தடுக்கப்படும் என நம்புவதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.