CEOs Meeting Venue Changed | முதன்மை கல்வி அலுவலர் ஆய்வுக்கூட்டம் இடம் மாற்றம்
CEOs Meeting Venue Changed
பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி செயலர் அவர்களால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 30.6.2023 மற்றும் 1.7.2023 ஆகிய நாட்களில் திருச்சியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆய்வுக்கூட்டம் 27.6.2023 மற்றும் 28.6.2023 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து அலுவலர்களும் தங்களது அலகிற்குட்பட்ட கூட்ட பொருட்களின் விவரங்களை தயாரித்து இணை இயக்குனர் (இடைநிலை கல்வி) அவர்களுக்கு Hard Copy வழங்கவும் மற்றும் பிடி 1 பிரிவிற்கு மின்னஞ்சல் மூலம் முவரிக்கு 20.6.2023க்குள் கூட்டப்பொருள் சார்பான விவரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது,
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.