You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

CEO TRANSFER LATEST NEWS 2023 | முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

Rain Holiday Tomorrow

CEO TRANSFER LATEST NEWS 2023 | முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

CEO TRANSFER LATEST NEWS 2023

பள்ளி கல்வித்துைற சற்று முன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை (சிஇஒ ) இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் சிஇஒ திருவளர்செல்வி துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு சிஇஒ அய்யண்ணன், துணை  இயக்குனர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், விருதுநகர் சிஇஒ ஞானகவுரி, செயலாளர், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், கோவை சிஇஒ பூபதி, துணை இயக்குனர் (நிர்வாகம்), தொடக்க கல்வி இயக்ககம் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் சிஇஒ அறிவழகன் விழுப்புரம் மாவட்டத்திற்கும், திருச்சி சிஇஒ பாலமுரளி, திருப்பூர் மாவட்டத்திற்கும், தஞ்சாவூர் சிஇஒ சிவக்குமார், திருச்சிக்கும், கன்னியாகுமரி சிஇஒ புகேழந்தி, திருவாரூர் மாவட்டத்திற்கும், சேலம் சிஇஒ முருகன், கன்னியாகுமாி மாவட்டத்திற்கும், புதுக்கோட்டை சிஇஒ மணிவண்ணன் பெரம்பலூர் மாவட்டத்திற்கும், தென்காசி சிஇஒ கபீர் சேலம் மாவட்டத்திற்கும், சரஸ்வதி, முன்னாள் முதன்மை கல்வி அலுவலர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் மாவட்டத்திற்கும், திருவள்ளூர் சிஇஒ இராமன், விருதுநகர் மாவட்டத்திற்கும், பிஏ ஆறுமுகம், துணை இயக்குனர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், துணை இயக்குனர் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read Also: பள்ளி திறப்பு எப்போது – கல்வி அமைச்சர் தகவல்  

எம்.முத்தையா, நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், தென்காசி மாவட்டத்திற்கும், பாலதாண்டாயுதபாணி, துணை இயக்குனர் சட்டம், தொடக் கல்வி இயக்கம், தஞ்சாவூர் மாவட்டத்திற்கும், மஞ்சுளா, செயலாளர், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், புதுக்கோட்டை, எல். சுமதி, துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம், கோவை மாவட்டத்திற்கும், குழந்தைராஜன், துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம், ஈரோடு மாவட்டத்திற்கும் மற்றும் திருநாவுக்கரசு, தொடக்க கல்வி இயக்ககம் (நிர்வாகம்), துணை இயக்குனர்(சட்டம்), தொடக்க கல்வி இயக்ககத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.