தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ் மாணவர்களை பெயின்ட் அடிக்க வைத்த விவகாரம்
மாணவர்களை பெயின்ட் அடிக்க வைத்த தலைமை ஆசிரியைக்கு ஈரோடு மாவட் முதன்மை கல்வி அலுவலகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
To Join in Our Telegram Group - Click Here
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டாரத்தில் பெரியூர் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 53 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியையாக பணியாற்றுபவர் தனலட்சுமி. இவர் கடந்த 8ம் தேதி அதே பள்ளியில் படிக்கும் 7ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களை முட்டி போட வைத்து வகுப்பு முன்பு உள்ள தரை தளத்திற்கு வர்ணம் பூச வைத்துள்ளார்.
இதையறிந்த அங்குள்ள கவுன்சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வைரலாக்கினார். அந்த வீடியோவில், ஓவிய போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு, வர்ணம் பூச வைத்ததாக கூறி தலைமை ஆசிரியை சமாளித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா மாணவர்கள், தலைமை ஆசிரியை ஆகியோரிடம் விசாரணை செய்தார். விசாரணை அறிக்கை முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் அவரிடம் வழங்கியுள்ளார். இதையடுத்து, கல்வி அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பின்னர், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கல்வியாளர்கள் கூறும்போது, குழந்தைகள் உரிமை மீதான நிகழ்த்தப்பட்ட ஒரு வன்முறை. வீடியோவில் எல்லா ஆதாரமும் இருக்கும்பட்சத்தில் அதிகாரிகள் கண்துடைப்புக்காக நோட்டீஸ் அனுப்பி காலதாமதம் செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், கல்வி அதிகாரிகளே, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை தலைமை ஆசிாியை மீது எடுத்திருக்க வேண்டும். மாவட்ட குழந்தைகள் அமைப்பு என்ன செய்துகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.