CEO Meeting Chennai 2023 | சிஇஓ ஆய்வுக்கூட்டம்
CEO Meeting Chennai 2023
பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை கூறியிருப்பதாவது, பள்ளி கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 27.1.2023, 28.1.2023 மற்றும் 29.1.2023 ஆகிய மூன்று நாட்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், ஹோட்டல் தமிழ்நாடு-ல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஆய்வு கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை), மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி), மடிக்கணினியுடன் கலந்துகொள்ள வேண்டும்.
Read Also: TN PLUS 2 Practical Exam
மேலும் 30.1.2023 அன்று சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.