Central Government Job Exam in Tamil | மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வு தமிழில் எழுதலாம்
Central Government Job Exam in Tamil
மத்திய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளை தமிழ், இந்தி உள்ளிட் 13 மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுதத் தகுதியானவர்கள்
https://ssc.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்ரவரி 23, 24ம் தேதிபளில் தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
Read Also: How To Prepare Competitive Exam in Tamil
இத்தேர்வுக்கு விண்ப்பித்து உள்ளவர்களுக்கான கணிணி வழித்தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. வழக்கமாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. மாநில மொழிகளிலும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்தநிலையில், இந்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வுகள் தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அதன் இணையதளத்தில் காணலாம்.