சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தலாம் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ், சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்தாண்டு செய்முறை தேர்வுகள் ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 7ம் தேதி வரை நடந்தது. தற்போது, கோவிட் காரணமாக, செய்முறை தேர்வு அட்டவணை இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அக மதிப்பீடு தேர்வு, திட்ட மதிப்பீடு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
அகமதிப்பீடு தேர்வு முடிந்தவுடன், மாணவர்கள் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்ட லிங்கில் மதிப்பெண் சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வில் மாணவர்களுக்கு சரியான மதிப்பெண் வழங்க வேண்டும் மற்றும் முறையான வழிகாட்டுதலின்படி பள்ளிகள் தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வர்களை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் நியமிக்க வேண்டும், இவ்வாறு பல வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசு கொடுக்கப்பட்ட கோவிட் – 19 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகளில் உறுதி செய்ய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
For more detail click to download: