Caste Issue at School in Tamil Nadu | பள்ளி மாணவர்கள் மீது சாதீய ரீதியாக தக்குதல்
Caste Issue at School in Tamil Nadu
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சாதி ரீதியாக அரசு பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி அடுத்த நெகலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களில் இரு தரப்புகளுக்கு இடையே சில நாட்களாக மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் நான்கு மாணவர்களை நெகலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் சம்பவத்தன்று காலையில் மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் மற்றும் கவுன்சிலர் பிரபாகரனின் தூண்டுதலின் பெயரில் பத்துக்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் உள்ள புகுந்து உதவி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவர்கள் நால்வரை சாதி ரீதியாக துரத்தி தாக்கியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source Thanthi TV.