Caste Discrimination at Arupukottai Municipal school | அருப்புக்கோட்டை நகராட்சி பள்ளி சாதிய வன்கொடுமை
Caste Discrimination at Arupukottai Municipal school
ரெட்பிக்ஸ் யுடியூப் தளத்தில், அருப்புக்கோட்டை பழங்குடி பிரிவைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் நேர்காணல் வழங்கினார். அப்போது, அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அதில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பல வருடங்களாக சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் நேர்காணலில் கூறும்போது, சாதி சான்றிதழ் இல்லாததால், அரசின் கல்வி சலுகைகளை பள்ளி மாணவர்கள் பெற முடிவதில்லை என்றும் அதிகாரிகளை சந்தித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, அருப்புக்கோட்டையில் உள்ள இருபாலர் படிக்கும் நகராட்சி பள்ளியில் உள்ள ஒரு சில ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தங்கள் சமுதாயத்தை சேர்ந்த 5ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தகளை சாதிய ரீதியாக துன்புறுத்துவதாகவும், வகுப்பறைகளை சுத்தம் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், கழிவறைகளை சுத்தம் செய்ய வைப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டு தெரிவித்துள்ளார்.
Read Also: குழந்தைகள் அடிப்படை உரிமைகள் என்ன?
மனஉளைச்சலாகும் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்கு செல்வதாகவும், பல மாணவிகளின் கல்விக்கனவு தகர்ந்துவிட்டதாகவும் அங்குள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மீது பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, 200 மாணவர்களில் 150 பேர் பள்ளி இடைநிற்றல் ஆகிவிட்டனர் எனவும், பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அப்போது நெறியாளர், இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, பயம் காரணமாகவும், எங்கு புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று மணிமாறன் அப்பாவித்தனமாக பதில் அளித்தது பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம், கல்வித்துறை மாணவர்களை பள்ளியை நோக்கி கொண்டு வர முயற்சி எடுத்து வரும் நிலையில், சாதிவெறி எனும் அழுக்கு எண்ணம் பிடித்த ஆசிரியர்களால் மாணவர்களின் கல்வி கலைவதாகவும் என்று நெறியாளர் மறைமுகமாக குட்டு வைத்துள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெறியாளர் நம்புவதாக தெரிவித்தார்.
இதுபோன்ற செயல்களால், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதாக சக ஆசிாியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.