You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Capacity Building Training Details அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மார்ச் 14ல் துவக்கம்

Tamil Nadu Children Education Policy 2021

Capacity Building Training Details அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மார்ச் 14ல் துவக்கம்

மாநில திட்ட இயக்குனர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்குகிறது.

Capacity Building Training Details

இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் 9 முதல் 12 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், கணினி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, கலை மற்றும் பிற) என அனைத்து ஆசிரியர்களுக்கும் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிக்கான காணொலிகள், செயல்பாடுகள் முதலியன உள்ளடக்கப்பட்டு 12 கட்டகங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டகங்களை ஆசிரியர்கள் டிஎன்டிபி இணையதளத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி (Capacity Building Training) என்ற தலைப்பின் கீழ் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சம்மந்தப்பட்ட ஆசிாியர்கள் தங்களது EMIS teacher ID and Password மூலமாக TNTP-யில் லாகின் செய்து இணையதள வாயிலாக இப்பயிற்சியிைன அவசியம் மேற்கொள்ள வேண்டும். இணைய வழி பயிற்சியானது 14.03.2022 அன்று தொடங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு கட்டக TNTP-யில் பதிவேற்றம் செய்யப்படும். புதிதாக கட்டகம் பதிவேற்றம் செய்யப்பட்டதும் ஆசிரியர்களுக்கு எமிஸ் மூலமாக தெரியப்படுத்தப்படும். ஆசிரியர்கள் இணையவழி பயிற்சியில் ஒரு கட்டகத்தை தங்கள் வசதிக்கேற்ற வகையில் தவறாமல் ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.

ஒரு ஆசிரியர் அனைத்து கட்டகங்களையும் முடித்த பின்னர் இப்பயிற்சி மேற்கொண்டதற்கான சான்றிதழை TNTP-யிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு கட்டகத்தில் உள்ள காணொலிகள், உரைவளங்கள், பலவிதமான செயல்பாடுகள் என அனைத்தையும் ஆசிரியர் 100 சதவீதம் நிறைவு செய்ய வேண்டியது அவசியம்.

எனவே. அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களும் 9 முதல் 12ஆம் வகுப்புகளை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் இணையவழி பயிற்சியினை மேற்கொள்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பயிற்சியினை பெற உள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.