தமிழ்நாடு அரசு தேர்வாைணயத்தின் குரூப் 1 தேர்வுக்கு சம்மந்தம் இல்லாத கருத்துகளை எழுதினால் விடைபுத்தகம் செல்லாததாகி விடும் என டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.
மாவட்ட உதவி கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு குரூப் 1 எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே நடந்த தேர்வில் சிலர், வினாக்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களையும், தங்களை அடையாளப்படுத்தும் வகையிலும் எழுதி இருந்தனர். நடக்க உள்ள குரூப் 1, குரூப் 1 பி உள்ளிட்ட தேர்வுகளில் அவ்வாறு யாேரனும் எழுதினாலோ அல்லது விடைபுத்தகத்தின் பட்டைகுறியீட்டை சேதப்படுத்தினாலோ பிறருக்கு தெரியும்படி விடை எழுதுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டாலோ, அவர்களின் விடைப்புதக்கம் செல்லாததாக அறிவிக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.