Campus Interview Tips in Tamil
பொறியியல் கல்லுரிகளிலும், கலை அறிவியல் கல்லுரிகளிலும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களைச் சில தனியார் நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் கல்லுரி வளாகத்துக்கே வந்து, மாணவர்களை வேலைக்கு ேநரடியாகத் ேதர்வு செய்கின்றன. இந்த வளாக நோ்காணலை எதிர்கொள்ள சில யோசனைகள்.முதலில் எழுத்துத் தேர்வும், குழு விவாதமும், பின்னர் நேர்காணலும் இருக்கலாம். எனவே, அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
கல்லுரிப் பாடங்களில் உள்ள அடிப்படை விஷயங்கள் குறித்து நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Read Also: Entrance Exam Tips in Tamilநேர்காணல் நடத்தும் நிறுவனங்களைப் பற்றிய விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.கல்லுரிகளில் வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை நன்கு தெரிந்து வைத்திருங்கள்.
வளாக நேர்காணலில் தகவல் தொடர்புத் திறன் உள்பட மென்திறன்கள், ஒரு கருத்தை உள்வாங்கும் திறன், படைப்பாற்றல் திறன், தனித் திறமைகள், குழுவில் இணைந்து பணியாற்றும் மனப்பான்மை, கல்லுரியில் இறுதி ஆண்டில் செய்த புராஜக்ட், கல்லுரியில் படிக்கும்போதே தொழில் நிறுவனங்களில் பெற்ற குறுகிய காலப் பயிற்சி போன்றவற்றை கவனிப்பார்கள்.மேலும் பாடத்திட்டத்தை தாண்டி புதிதாகக் கற்று இருக்கிறார்களா, தொடர்ந்து கற்று கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களா என்பதயைும் பார்ப்பார்கள்.