ஆசிரியர் பயிற்றுநர்கள் போராட்டம் |முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை சேலத்தில் பரபரப்பு
சேலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் நூதனமுறையில் ஆசிரியர் பயிற்றுநர்களை பணி நெருக்கடிக்கு உட்படுத்துவதாக கூறி ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் வியாழன் இரவு முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கோரிக்கை மனு அளித்தனர்.
மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகளின்படி, ஆசிரியர் பயிற்றுநா்களின் பள்ளி பார்வை குறித்தான காலம்/நேரம் நிர்ணயம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. திட்ட இயக்குனர் செயல்முறைகளின்படி, பிஆர்டிஇ/சிஆர்டிஇ பணியிடங்களுக்கு ஏற்ப பள்ளிகளை குறுவளமைய அளவில் ஒரு மேல்நிலை/உயர்நிலை அரசு பள்ளியை மையமான கொண்டு 8 கி.மீ சுற்றளவிற்குள் பிஆர்சி அமைக்க வேண்டும் என்ற வழிகாட்டு நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.
ALSO READ THIS : ஆசிரியர் பயிற்றுநர்களை கலங்கடித்த கலந்தாய்வு – கல்வித்துறையில் தில்லாலங்கடி
சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நேரம், காலம் பார்க்காமல் மாவட்ட அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் அனைத்து வகை திட்டக் கூறுகள் சார்பான பணிகளை தங்கு தடையின்றி, தொய்வின்றி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள்/ வழிகாட்டுதலின்படி சிறப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
இந்த நிலையிலும் கூட, மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில், ஆசிரியர் பயிற்றுநரின் பள்ளி பார்வை குறித்த நேரம் வரையறை செய்யப்படாத காரணத்தினால், ஆசிரியர் பயிற்றுநர்கள் அலுவலக நேரத்தை பின்பற்றி, பள்ளி பார்வைக்கு என்று வரும் சூழ்நிலையில், தாங்கள் ஏன் பள்ளி நேரத்திற்கு செல்லவில்லை என கூறி ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது எந்த வித முன் விளக்கமும் கோராமல் சுமார் 5, 10 நிமிடங்கள் காலதாமதமாக சென்றதற்கு முதல் முறையிலேயே நேரடியாக, தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதியின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மேற்படி பள்ளி பார்வைக்கு செல்லும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உரிய நேரத்தில் தங்கள் பள்ளிக்கு வந்துவிட்டனரா என மேற்படி பள்ளியின் பார்வைக்கு சென்றுள்ள ஆசிரியர் பயிற்றுநரின் கைப்பேசி வாயிலாகவே அழைத்து, பள்ளியின் பணிபுரியும் பிற ஆசிரியர்களிடம், ஆசிரியர் பயிற்றுநர்கள் கொடும் குற்றம் புரிந்தவர்களாக எண்ணி, குற்றவாளிகளை விசாரணை செய்வது போல், விசாரணை செய்வதை கைவிட வேண்டும்.
இதுபேன்ற செயல்பாடுகளால் ஆசிரியர் பயிற்றுநர்கள் மீண்டும் அதே பள்ளிக்கு பாா்வைக்கு செல்லும்போது, மிகுந்து கனவீனத்தை ஏற்படுத்துகின்றனர். இதுதவிர, யாருக்கு ? யார்? கண்காணிப்பு அலுவலர் என்று அறிய இயலவில்லை. இந்த நடைமுறையை கைவிட வேண்டும்.
சேலம் மாவட்ட திட்ட அலுவலகத்தில் பணிபுரியும் மாவட்ட திட்ட கூறு ஓருங்கிணைப்பாளர்கள், அலுவலக நேரத்திற்கு பின்பும் பணி செய்ய வேண்டுமென்று, குறிப்பாக பெண் திட்ட கூறு ஒருங்கிணைப்பாளர்கள் நிர்பந்தம் செய்யப்படுவதாக அறிகிறோம். தமிழ் நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனர் செயல்முறைகள்படி, இனிவரும் காலங்களில் பள்ளி கல்வித்துறையை சார்ந்த அலுவலகங்களில் அலுவலக நேரத்திற்கு பின்னர், பணியில் ஈடுபடுத்துவதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என திட்ட வட்டமாக அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கனவீனமான, கன்னியமற்ற வேறுபாடுகளின்றி ஆசிரியர் பயிற்றுநர்களை ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.