செப்டம்பர் மாதத்திற்கான ஊதியதம் இன்னும் வழங்கப்படாததை கண்டித்து, பிஆர்டிஇ எனப்படும் ஆசிரியர் பயிற்றுநர்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக தகவல் வௌியாகி உள்ளது.
தேசிய கல்வி கொள்கை 2020, தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்ததால், மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா நிதி தமிழகத்திற்கு வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சமக்ரா சிக்ஷா கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் வீட்டுக்கடன், மாதத்தவணை, குடும்ப செலவு, மருத்துவ செலவு உள்ளிட்டவை எதிர்கொள்ள முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.மேலும், இந்ந விவகாரம் தொடர்பாக மாநில அரசும் எந்த முடிவும் எடுக்காததால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ஊதியம் கிடைக்குமா, கிடைக்காததா என்ற விரக்தியில் உள்ளனர். அரசியல் கட்சியினரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பகுதி நேர ஆசிரியா்கள், எல்கேஜி,யுகேஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளளா். இந்த நிலையில், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கல்வி அதிகாரிகள் என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர்.