கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளை ‘TN Education Info’ அவ்வப்போது தகவல்களாக வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில், ஒரு புதிய திருப்பு முனையாக ஆசிரியர் சங்கத்தினர் அளித்த புகார் அடிப்படையில், வட்டார கல்வி அலுவலகங்களில் நடந்த வசூல் வேட்டை குறித்து விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அதன் கீழ் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த உத்தரவில் அவா் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் சம்பள பட்டியலில் மாதவாரியாக பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி முறையாக TDS செய்து Form – 16 Part & Part B வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாறாக வருமான வரி தாக்கல் செய்வதற்கென ஒவ்வொரு ஆசிரியரிடம் இருந்து ரூ. 200 முதல் ரூ.300 வரை வசூல் செய்து பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று வருவதாக பார்வையில் காணும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட மனு தக்க நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.
மனுவின் மீது பரிசீலனை மேற்கொண்டு தங்கள் ஆளுகைக்கு கீழ் பணிபுரிந்து வரும் வட்டார கல்வி அலுவலகங்களில் நடைபெற்று வருமான வரி சார்பான பணிகள் நடைபெறுவதை கண்காணித்து, மேற்படி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள பிரச்னையை உடனடியாக கவனத்தில் கொண்டு அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களிலும் அலுவலக பணியாளர்களை கொண்டே TDS செய்து Form – 16 Part & Part B வழங்கிட உரிய நடவடிக்கைளை மேற்கொண்டிட சார்ந்த வட்டார கல்வி அலுவலகங்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இதன் நகல் புகார் அளிக்கப்பட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கல்வித்துறையி்ல் நடக்கும் ஊழல், முறைகேடுகள் குறித்து நீங்கள் ஒரு வரியில் கமெண்ட் பாக்ஸில் விவரிக்கலாம்.