You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
Bommanampalayam government school | களப்பயணம் கல்வியால் பரவசமடைந்த குழந்தைகள்
Bommanampalayam government school
கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ள பொம்மணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வரும் நிலையில், ஆசிரியர்கள் யுவராணி மற்றும் ஸ்ரீதேவி ஒன்றாம் முதல் மூன்றாம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கின்றனர்.
இந்த நிலையில், மூன்றாம் பருவத்தில் கிராமத்தை சுற்றி என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது. அந்த பாடத்தில் கிராமத்தை சார்ந்து கருப்பொருள், படங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த செவ்வாயான்று ஆசிரியர்கள் இந்த பாடத்தை கற்பித்தனர்.
அப்ேபாது புத்தக கல்வி மட்டும் கொடுக்கக்கூடாது, களப்பயணம் மூலம் கல்வி அளிக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். அவ்வாறே, உள்ளூரில் உள்ள முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று, அதன் செயல்பாடுகளை நேரடி கல்வியா வழங்கவும் முடிவு செய்தனதர். இதுகுறித்து, அவர்கள் ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா செல்லலாம் என்று கூறியபோது, குழந்தைகள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர்.
Read Also: இல்லம் தேடி கல்வியில் புதுமை – அசத்தும் தன்னார்வலர் தம்பதியினர் மாரிமுத்து மனிஷா
அதன்படி, ஆசிரியர்கள் இருவரும் அருகில் உள்ள நூலகங்களுக்கு சுமார் 60 குழந்தைகளை நேரடியாக அழைத்து சென்று, நூலக செயல்பாடுகள், நூலக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து உணர செய்தனர்.
அதன்பின்னர், விவசாயம் குறித்து புரிதலை ஏற்படுத்த அங்குள்ள விவசாய தோட்டத்திற்கு அழைத்து சென்று, விவசாய களப்பணியாளர்களிடம் நேரடியாகவே கலந்துரையாட வைத்துள்ளனர். விவசாய பணிகள், விவசாயத்தின் முக்கியத்துவம், உணவு உற்பத்தி குறித்தும் குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது.
இதுதவிர, பூங்காவிற்கு அழைத்து சென்று விளையாட வைத்துள்ளனர். அவர்களும் தங்களை மறந்து, விளையாடி மகிழ்ந்தனர், நியாயவிலை கடைக்கு அழைத்து சென்று, அதன் நோக்கம், பயன்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதே சமயம் மளிகை கடைக்கும், நியாய விலை கடைக்கும், மளிகை கடைக்கும் உள்ள வேறுபாடுகளையும் கூறியுள்ளனர். மேலும் அந்த வழியாக என்னென்ன அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது எடுத்துரைத்தனர். இதுபோன்ற புதிய களப்பயணத்தால், பள்ளிம மாணவர்கள் பெரும் உற்சாகம் அடைந்ததாகவும், அடுத்தநாள் பள்ளிக்கு மகிழ்ச்சியாகவும் வந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். சிறப்பம்சமாக, சில மாணவர்கள் சில குழந்தைகள் நூலகத்தில் உறுப்பினர்களாகவும் சேர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக கல்வியாளர் வேணுபிரகாஷ் கூறும்போது, இன்றைய குழந்தைகள் பெற்றோர் உறவில் இருந்து விலகி, தொலைபேசி பயன்பாட்டிற்கு ஈர்க்கப்படுகின்றனர். மூளை சோர்வாகி, மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் விளையாடும் இயல்புகளிலிருந்து நகர்கின்றனர். பல்வேறு புறசூழ்நிலைகளில் குழந்தைகள், மாணவர்கள், இளம் வயதினர் தடம் மாறி செல்கின்றனர்.
இதுபோன்ற நிலையில் இதுபோன்ற ஒரு நாள் சுற்றுலா, குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும், மகிழ்ச்சி உண்டாயிருக்கும். ஆசிரியர்கள் குழந்தைகள் உறவில் நெருக்கம் ஏற்படும். இதனால், ஆசிரியர்கள் குழந்தைகளின் கல்வி திறன் மேம்படுத்துவதில் மிகப்பெரிய சிக்கல் இருக்காது, குழந்தைகளும் ஆசிரியர்கள் சொல்பேச்சு கேட்பார்கள்.
இதுபோன்ற களப்பணி கல்வி மூலம், அதன் கருப்பொருள்களை குழந்தைகள் ஆழமாக புரிந்துகொள்வார்கள். வித்தியாசமான கற்பித்தல் நிகழ்வுகளை ஆசிரியா்களே கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைத்து, செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இது அவர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், பெற்றோர்களும் நேரம் ஒதுக்கி, குழந்தைகளுடன் தங்கள் நேரத்தை செலவு செய்து அவ்வப்போது உள்ளூரில் ஒரு பயணம் அழைத்து செல்வது இன்றைய கால கட்டத்திற்கு மிக அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.