Read Also: Cyber Security Course in Tamil
தமிழக அரசு கடந்த ஆண்டு பிளாக் செயின் இணையக் கொள்கையை வெளியிட்டுள்ளது. வருவாய் துறை ஆவணங்கள் மட்டுமின்றி அனைத்துத் துறை ஆவணங்கள் மட்டுமல்லாது அனைத்து துறை முக்கிய ஆவணங்களை பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது. இதற்காக புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இ-சேவை வழங்கும் துறை மூலம் ஆள்தேர்வு நடத்த அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது. வரும் காலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடத்த இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தனிமனிதப் பரிமாற்றங்கள் தொடங்கி ராணுவ ரகசியம் உள்பட அதிமுக்கியத்துவம் வாய்ந்த தரவுகளை பாதுகாக்கவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் இந்த தொழில்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஹேக்கர்களால் சிதைக்க முடியாத தரவுகளை உருவாக்கும் இந்த தொழில்நுட்பம் எண்மப் பயன்பாட்டில் ஒரு மைல்கல்லாக அமையும். பிளாக்செயின் டெக்னாலஜி ஆன்லைனில் படித்து பட்டயம் பெறலாம். இதற்கான படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் வழிவகுக்கிறது. முழுமையாக படித்து கற்பனை திறனை வளர்த்துக்கொள்ள முடியும். சென்னை ஐஐடி கல்வி நிறுவனமும் இதற்கான படிப்பும் வழங்குகிறது. இதை தவிர இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாக் செயின் டெக்னாலஜி (ஹைதராபாத்), இண்டியன் பிளாக் செயின் இன்ஸ்டிடியூட் (புணே), கேரளா பிளாக் செயின் அகாதெமி (திருவனந்தபுரம்), பிசாண்ட் டெக்னாலஜிஸ் (பெங்களுரு), அமிட்டி பியூஷர் அகாதெமி (மும்பை) மற்றும் ஜிடிஏ அகாதெமி (குருகிராம்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய படிப்பகள் உள்ளன.