நிதியை சுருட்டும் வட்டார கல்வி அலுவலர்கள்
தமிழகத்தில் கடந்த 13ம் தேதி தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி பராமரிப்பு பணி, மாணவர் சோ்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டார கல்வி அலுவலர்கள்
அதேசமயத்தில் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்ட பாட புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து, வாகனங்கள் மூலம் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு எடுத்து சென்று வழங்குவது வட்டார கல்வி அலுவலர்களின் பணியாகும். இதற்காக, பள்ளி கல்வித்துறை சுமார் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான நிதியை பள்ளிகளின் எண்ணிக்கை ஏற்ப, வட்டார கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை வழங்குகிறது.
READ THIS: வாலாட்டும் வட்டார கல்வி அலுவலர்
அதன்படி வட்டார கல்வி அலுவலர்களே புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு புத்தகங்களுக்கு எடுத்து சென்று வழங்க வேண்டும். ஆனால், அதிகார மமதையில், அவா்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களே வாகனங்களை வாடகைக்கு அழைத்து வந்துஇ பாட புத்தகங்களை வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்ல வேண்டும் என்று வாய்மொழியில் உத்தரவிட்டுள்ளார்களாம் பெரும்பாலான வட்டார கல்வி அலுவலர்கள் இந்த போக்கினை கடைப்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுமட்டுமா, வழங்கப்பட்ட நிதியை சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு வழங்காமல், இவர்களே அபேஸ் செய்கிறார்களாம். தலைமை ஆசிரியர்கள் நிதியை கேட்டால், ஒரு சிலர் கொடுப்பதாகவும், இன்னும் ஓரு சிலர் கல்வித்துறை இன்னும் நிதி வழங்கவில்லை என்று பொய் சொல்வதாக, தலைமை ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
இன்னும் ஒரு சில தலைமை ஆசிரியர்கள்
நமக்கு எதுக்குடா வம்பு, இருக்குற இட தெரியாம இருந்துக்கனும் என்ற பார்முலாவை பின்பற்றி அமைதியாக இருக்கிறார்களாம். இந்த விஷயத்தில் மாவட்ட முதல் வட்டார அளவில் உள்ள சங்கவாதிகள் கூட சைலென்ட் ஆக இருப்பதாக தலைமை ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
சரி அவர்கள்தான் அப்படி என்றால், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு, இதைக்கூட கண்காணிப்பதில்லை என்று அவர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
ஆதாரத்துடன் விரிவான செய்தி விரைவில்…