You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
பாஜக | ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டம் வருத்தம் தெரிவித்த பாஜக
பாஜக | ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டம் வருத்தம் தெரிவித்த பாஜக
பாரதிய ஜனதா கட்சி புதுக்கோட்டை மாவட்டம் அரசு தொடர்பு பிரிவு சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்தது.
போராட்டத்திற்கான காரணம் குறித்து, நோட்டீஸில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளியில் தனது வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெறாத அந்தந்த வகுப்பு ஆசிரியரை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
தேர்ச்சி அதிகம் பெற வைக்க முடியாத அந்த பள்ளி தலைமை ஆசிரியரை பணி இறக்கம் செய்ய வேண்டும்.
அதிகமான சம்பளம் பெறும் துறை அதிகமாக விடுமுறை விடப்படம் துறை ஆசிரியர் பணி மட்டுமே அப்படி இருக்க, இருக்கின்ற நேரத்தை மாணவர்களுக்கு உபயோகமாக பாடம் கற்பிக்காமல் தினமும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்,
என கேள்வி கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதன் மாநிலத்தலைவர் செல்வக்குமாார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய கிராமப்புற ஏழை எளிய குழந்தைகளுக்கு பல்வேறு நெருக்கடியான நிலையிலும் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையோடும் தியாக உணர்வோடும் பணியாற்றி அந்த மாணவர்களை தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு விடுமுறை நாட்கள், பள்ளி நேரத்துக்கு அப்பாற்பட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்பு பிரிவு என்ற பெயரில் ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத நடவடிக்கையாக தேர்ச்சி சதவீதம் குறைந்த ஆசிரியர்களை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என நாளை (4ம் தேதி) மாவட்ட கல்வி அலுவலகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்(TATA) சார்பாக வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read Also This கோவிட் 19 பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற கல்வித்துறை உத்தரவு
மேலும் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசும் காவல்துறையும் அனுமதி வழங்கக்கூடாது என்பதையும் மாவட்ட கிளையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் என்பது ஆசிரியரை மட்டுமே சார்ந்தது என ஒரு உளவியல் ரீதியான புரிதலே இல்லாத ஒரு அரசியல் கட்சி இருப்பதை நினைத்து நாங்கள் வேதனைப்படுகிறோம். இந்தியாவின் கல்வி முறையும் தற்போது நிலவிவரும் கல்விமுறையும் மத்திய அரசு இன்றைக்கு அறிவித்திருக்கக்கூடிய தேசிய கல்விக் கொள்கை எந்த மாணவனையும் படிக்கவிடாமல் செய்யக்கூடிய கல்வி முறையைஇந்த நாடு பெற்றுள்ளது, ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேர்வு வைத்து தேர்வு என்ற முறையில் மாணவர்களை கல்வியை சூழ்நிலையை விட்டு குலக்கல்விக்கு அனுப்பும் திட்டத்தை மத்தியில் ஆளும் மத்திய அரசு செய்து கொண்டு மாணவர்களின் மீது அக்கறை உள்ளவர்கள் போல காட்டிக்கொள்வதற்காக அரசியல் லாபத்திற்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தியாவின் கல்விக் கொள்கையில் தனியார்மயம் தாராளமயக் கொள்கையில் தனியார் பள்ளிகளை திறந்து விட்டு காசு உள்ளவர்களுக்கு கல்வி என்றும் நிலையை உருவாக்கியது யார்?
கிராமப்புறங்களில் வாழும் வசதி வாய்ப்பு இல்லாத படிப்பறிவு குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளை வறுமையில் வாடிக் கொண்டு பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை வீட்டில் சென்று அழைத்து வந்து கல்வி கற்றுக் கொடுத்து தேர்வு எழுத வைத்து தேர்ச்சி விதத்தை பெற்று தந்திருக்கிறோம் என்ற அந்த புரிதல் கூட இல்லாத பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது.
இன்றைக்கு இந்த இந்திய நாட்டினுடைய கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவற்றையெல்லாம் சுதந்திரத்திற்கு பின்னால் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்து அதில் யார்? காலத்தில் பின்னடைவு ஏற்பட்டது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் அல்லது எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
தமிழகத்தின் ஆசிரியர்கள் இதுவரை அரசியலாய் பார்க்காமல் எந்த அரசியல் கட்சி தலைமை ஏற்று ஆட்சி நடத்தினாலும் அந்த அரசுகளுடைய செயல்பாட்டில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் இருக்கக்கூடிய பள்ளிச்சூழல், அடிப்படை கட்டமைப்பு, மாணவருடைய குடும்பச் சூழல், குழந்தைகளின் மனநிலை இவற்றைப் பொறுத்து அதற்கு ஏற்றார் போல இந்த கல்வியை செம்மையாக கற்றுக் கொடுத்து இந்த தேர்ச்சி சதவீதத்தை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாத அரசியல் கட்சியாக BJPயை நாங்கள் பார்க்கின்றோம்.
இதுவரை எங்களுடைய கோரிக்கைக்காகவும் இந்த மாணவர்களுடைய நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் அரசுகளை எதிர்த்துப் போராடி இருக்கின்றோமே தவிர, எந்த அரசியல் கட்சியும் எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலையை இதுவரை யாரும் ஏற்படுத்தவில்லை ஆனால் தற்போது இந்த போராட்டத்தைப் பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்ற நிலையில் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே தமிழக அரசு உடனடியாக இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக வந்த செய்தி மாவட்ட பாஜக அனுமதி இல்லாமல் அறிவிக்கப்பட்டதாகும், எனவே இந்த போராட்டத்திற்கு, மாவட்ட பாஜக கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது எனவும், இந்த சம்பவத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மனது புண்பட்டு இருப்பின், வருத்தத்தை தெரிவித்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.