பிகார் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,398 ஆசிரியர்களுக்கு, முதல்வர் நிதிஷ்குமார் இன்று நியமன கடிதங்களை வழங்கினார்.
இதையடுத்து, பிகாரில் மொத்த அரசு ஆசிரியர்களின் எண்ணிக்கை 5,62,427 ஆக உயர்ந்தது. இதற்கு முன்பு ஆசிரியர்கள் பஞ்சாயத்து மற்றும் அமைப்புகளால் நியமிக்கப்பட்டனர். கல்வி வளர்ச்சியில் மாநிலத்தின் கவனத்தை வலியுறுத்திய முதல்வர் நிதிஷ்குமார், இதற்காக பட்ஜெட்டில் 22 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பாக, பெண் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும், என்றார்.