கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அதன் தொலைத்தூர கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) வெளியிட்ட செய்தி குறிப்பில் இ்ளங்கலை, முதுகலை, எம்பிஏ, எம்சிஏ, பி.எட், டிப்ளமோ உள்ளிட்ட தொலைத்தூர கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. தற்போது, ஜனவரி 20ம் தேதி வரை தேர்வுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என சற்று முன்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.