அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

Bharathiar University Ph.D Admission 2021 Full details

Bharathiar University Ph.D Admission 2021 Full details

Bharathiar University Ph.D Admission 2021 Notification

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி ,திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்கலைக்கழக துறைகள், இணைப்பு கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்களில் முழு நேரமாகவும், மற்றும் பகுதி நேரமாகவும் நடத்தப்பட்டு வரும் எம்.பில். பிஎச்.டி படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 20ம் தேதி காலை 11 மணியிலிருந்து 12.30 மணி வரை இணைய வழியில் வரும் 2021 -22 கல்வியாண்டுக்கான பொது தகுதி நுழைவு தேர்வு நடைபெறுகிறது.

Bharathiar University M.Phil, Ph.d Hall Ticket Download

பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பொது நுழைவுத்தேர்வுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விவரங்கள், தேர்வு நடத்தை விதிமுறைகள், இதர விவரக்குறிப்புகள், செப்டம்பர் 17ம் தேதி முதல் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைய தளம் வாயிலாக பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நுழைவு தேர்வுக்கு இணையம் மூலம் பதிவு செய்த மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அவர்கள் முதுகலையில் படித்த பாடம், மாணவரின் பெயர், பதிவு எண், பதிவு செய்த செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சலை சரிபார்த்து கொள்ளலாம்.

Bharathiar University M.Phil, Ph.d Contact Number, Mail ID.

கொடுக்கப்பட்ட தகவில் பிழை மற்றும் குறைபாடுகள் இருந்து, ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் கீழே உள்ள தொலைபேசியில் அலுவலர்களை அணுகி சாிசெய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0422 – 2428311, 2428318 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Bharathiar University M.Phil, Ph.d Model Exam 2021

இணையதளம் மூலம் நடைபெறும் தேர்வுக்கு, விண்ணப்பித்த மாணவர்களுக்கு செப்டம்பர் 17ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இணைய வழியில் மாதிரி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விண்ணப்பித்த மாணவர்களும், மாதிரி தேர்வு அனுபவத்தை அறிந்துகொள்ள அவர்களுக்கு வழங்கப்பட்ட லாகின் ஐ.டி மற்றும் கடவுள் சொல்லுடன் கட்டாயமாக மாதிரி தேர்வினை எழுதுமாறு பல்கலைக்கழகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20ம் தேதி இணையதளம் மூலம் நடைபெறும் தேர்வை இணைய வழியில் கண்காணிக்க 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

எம்.பில், பிஎச்.டி படிப்புகளுக்கு நுழைவு தேர்வுக்கு இணைய வழியில் 3,205 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். அதில் ஆண்கள் 1146, பெண்கள் 2059 கடந்த ஆண்டு விட இந்த வருடம் அதிகம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Bharathiar University M.Phil, Ph.d Model Exam 2021 Exemption

UGC, CSIR, NET, NET -LS, SET, DST, DST – INSPIRE, GATE ஆகிய தோ்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பில் முடித்தவர்கள், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள், விமானப்படை நிர்வாகவியல், கல்லூரி பேராசிரியர்கள், வெளிநாடுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத தேவையில்லை.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts