முழு ஊரடங்கு காரணமாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நாளை தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து, பல கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது, மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 10ம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்கள் மற்றும் அரியா் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும் எனவும், இதற்கென தனியாக ஒரு போர்ட்டலும் உருவாக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு அறிவித்தவுடன், துணைவேந்தர் காளிராஜ் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது, தேர்வுகளை ஒத்திவைக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆன்லைன் தேர்வுகள் நடக்கும்போது, பேராசிரியர்கள் தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக கல்லூரிக்கு வர வேண்டும், அதேபோல் மாணவர்கள் விடைத்தாள் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் கல்லூரிக்கு வந்து விடைத்தாளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சூழலும் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டும், தமிழக அரசு முடிவுகளின்படி, செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.