You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Bharathiar University Distance Education Admission 2023 | பாரதியார் பல்கலைக்கழகம் தொலைமுறை கல்வி மாணவர் சேர்க்கை

Typing exam apply Tamil 2023

Bharathiar University Distance Education Admission 2023 | பாரதியார் பல்கலைக்கழகம் தொலைமுறை கல்வி மாணவர் சேர்க்கை

Bharathiar University Distance Education Admission 2023

பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பாரதியார் பல்கலைக்கழகத் தொலைமுறை கல்விக்கூடம், பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று குறைந்த கல்வி கட்டணத்தில் தரமான கல்வியை திறந்த மற்றும் தொலைமுறையில் 1992 முதல் வழங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டில் இணைய வழியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்த பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து அனுமதி பெற்று நடத்தி வருகிறது.

அதன்படி பாரதியார் பல்கலைக்கழக தொலைமுறை கல்விக்கூடம் இளநிலை மற்றும் முதுநிலை சார்ந்து 9 பட்டப்படிப்புகளை இணைய வழியில் வழங்கி வருகிறது.

Read Also: எப்படி கல்லூரி படிப்பை தேர்வு செய்வது

இளங்கலை பிரிவில் மூன்று படிப்புகள் வழங்கப்படுகின்றன. (பி.ஏ ஆங்கில இலக்கியம், பிபிஏ மற்றும் பி.காம்) ஆறு முதல்நிலை பட்டங்கள் (எம்ஏ தமிழ் இலக்கியம், எம்ஏ ஆங்கில இலக்கியம், எம்ஏ பொருளாதாரம்இ, எம்.காம் நிதி மற்றும் கணக்குப்பதிவியல், எம்ஏ தொழில்நெறி வழிகாட்டுதல்)

ஜனவரி 2023 அமர்வில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இணையவழியில் நடத்தப்பெறும் பாடப்பிாிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பம் பதிவு செய்தல் தொடங்கி, கல்வி கட்டணம், பாடம் நடத்துதால், பாடத் தரவுகள் (எழுத்து மற்றும் காணொளி) பதிவிடுதல், தேர்வு, தேர்ச்சி முடிவுகள் அறிவித்தல், சான்றிதழ் வழங்குதல்  என செயற்பாடுகளுக்கும் இணையவழியிலேயே நடைபெறும். இணையவழி பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் இணையவழியிேலயே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழ இணையதளத்தை பார்க்கலாம்.

மாணவர்கள் பதிவு தொடங்கும் நாள் 3.3.3023 மற்றும் இறுதி நாள் 31.3.2023, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.