Baseline Assessment எப்போது முடிக்க வேண்டும் – இயக்குனர் உத்தரவு
baseline Assessment
Read Also This: தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் ஏன்?
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 2ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ள இயக்குனரின் செயல்முறையில் அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீட்டை Baseline Assessment அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 4.7.2022 முதல் 8.7.2022க்குள் நடத்த ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு Baseline Assessment இன்னும் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது. ஆகவே, இந்த மதிப்பீட்டை முழுமையாக 13.7.2022க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
