பிஏ தமிழ் யார் படிக்கலாம்
தமிழ்த்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் இந்த துறையை தேர்வு செய்யலாம். பன்னிரெண்டாம் வகுப்பில் நீங்கள் எந்த பாடப்பிரிவு படித்திருந்தாலும் சரி, கல்லூரியில் இளங்கலை தமிழ் பாடப்பிரிவு தேர்வு செய்து படிக்கலாம். இதில் எந்த நிபந்தனையும், கட்டுப்பாடும் இல்லை.
பிஏ தமிழ் படிப்பு காலம் அனைத்து இளங்கலை படிப்பு போன்று, பி.ஏ தமிழ் படிப்பு காலம் மூன்றாண்டு.
பிஏ தமிழ் படிப்பு சேர கல்விதகுதி நீங்கள் பன்னிெரண்டாம் வகுப்பு முடித்தால் போதுமானது.
பிஏ தமிழ் படிப்பு கல்லூரி இளங்கலை தமிழ் படிப்பு வழங்கும் கல்லூரிகளில் நீங்கள் சேரலாம்
பிஏ தமிழ் படிப்பு கட்டணம்இந்த படிப்பு அரசு கலை கல்லூரிகளில் குறைந்த கட்டணத்திலேயே படிக்கலாம். தனியார் கல்லூரிகளில் சராசரியான கட்டணம் ரூ 20,000 முதல் ரூ 40,000 வரை இருக்கும். கட்டணம் கல்லூரி ெபாருத்து மாறுபடும்.
பிஏ தமிழ் படித்தால் என்ன வேலை கிடைக்கும்
தமிழ் மொழியிலாளர், தமிழ் ஆசிரியர் மற்றும் பேராசிரியர், மொழி பெயர்ப்பாளர், செய்திதுறையில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக, உதவி ஆசிரியராக, பணியாற்ற முடியும்.
பிஏ தமிழ் படித்தால் என்ன சம்பளம் கிடைக்கும்
வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ 3 லட்சம் முதல் 9 லட்சம் சம்பளமாக பெற வாய்ப்பு உள்ளது. அரசு பணிகளில் அதிக சம்பளம் கிடைக்கும்.
பிஏ தமிழ் பாடத்திட்டம்
முதலாம் ஆண்டு - பொதுவான தமிழ் மற்றும் ஆங்கிலம், நவீன இலக்கியம், இலக்கணம், தமிழ்நாடு கலச்சாரம் மற்றும் வரலாறு.
இரண்டாம் ஆண்டு - பொதுவான தமிழ் மற்றும் ஆங்கிலம், இடைக்கால இலக்கணம், இதழியல், சுற்றுச்சூழல்.மூன்றாம் ஆண்டு –- சங்க இலக்கியம், இலக்கணம், தமிழ் மொழி இலக்கிய வரலாறு மற்றும் இலக்கிய விமர்சனம், படைப்பாற்றல் எழுத்தாற்றல்.
தமிழ் மொழி சிறப்புகள்
மக்களிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான உருவானதே மொழி. மக்களின் எண்ணம், செயல்பாடுகள் மாற, மாற மொழியும் வளம்பெற்றது. மக்களின் மனவளத்திற்கேற்ப வளர்ச்சி பெற்ற மொழி, அவர்களின் அனுபவங்களை, எண்ணங்களை உணர்வுகளால் பதிவு செய்து வைக்கும் கருவியாகவும் மாறியது. அம்மாற்றத்தின் காரணமாக இலங்கியங்கள் உருப்பெற்றன. அந்த இலக்கியங்கள் மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் பிற்காலத்தவர்களுக்கு எடுத்துரைக்கும் கருவூலங்களாக விளங்கின.“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”, என்று மகாகவி பாரதியார் தமிழ்மொழியை சிறப்பிக்கிறார். தமிழ் பழமையானதும், பண்பட்ட மொழியாகும்.
தமிழ்மொழியின் தொன்மை“கல்ேதான்றி மண்தோன்றா காலத்தே முன்
தோன்றிய மூத்தகுடி” - என்ற புறப்பொருள் ெவண்பா மாலை வரிகளிலிருந்து தமிழ்மொழியின் தொன்மை புலானகிறது. உலகின் முதல்மொழி என்று தமிழ்மொழி போற்றப்படுகிறது. தமிழிலிருந்துதான் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துரு ஆகியன தோன்றின என்று அறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். தமிழ்மொழி நீண்ட நெடிய வரலாற்றை உடையது.
தமிழின் இனிமை தமிழுக்கு அமுதென்றுபேர் –- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்என்று தமிழின் இனிமையைக் பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.
மேலும், செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று தமிழின் சுவையை தமிழ்நாட்டின் பெருமையை விதந்தோலுகிறார்.
செம்மொழி எனும் பெருமைஒரு மொழியை செம்மொழியாகத் தேர்வு செய்ய அதன் இலக்கிய படைப்புகள் வளம்மிகுந்ததாகவும், பழமையானதாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட முதல்மொழி தமிழ்மொழிதான். தமிழ்மொழியின் சிறப்புக்கு இது ஒன்றே சான்றாகும். தமிழுக்குள் கிடைக்கப்பெற்ற முதல்நூல் அகத்தியமே ஆகும். இதனை, ஆகைப்பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல் என்று பன்னிருப்பாடல் உரைக்கிறது. இந்நூல் முழுமையும் கிடைக்கப்பெறவில்ைல. ஆனால், அகத்திமரின் பன்னிரு மாணாக்கருள் ஒருவரான ஒல்காப் புகழ்த் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியமே கிடைத்த ஐந்திலக்கண நூலாகும்.
இந்நூல் தமிழுக்குத் கிடைத்த தமிழ்நூலாகும். இது தமிழ்மொழி பேசும் நிலப்பரப்பை பற்றி எடுத்தோதுகிறது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூடலும் நல்லுலகம் என்கிறது. உலக வாழ்க்கையும் செய்யுள் அழகையும் அடிப்படையாக கொண்ட உண்மைநூல். தமிழுக்கு உயிர்நூல். பண்டைதமிழா் வாழ்வு, தொழில், பண்பு, நாகரீகம், சமூகநிலை, பொருள்வளம், சமயநிலை, போர்முறை, ஆட்சிமுறை, மரபு, கடவுள்கொள்கை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் அரிய கருவூலமாக திகழ்கிறது.
திருக்குறள் உலகபொதுமறை என்று போற்றப்படுகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் திறக்குறள் மனித வர்கத்தின் ஒருமைப்பாட்டை காட்டும் விதம் உலகமொழிகளில் எங்குமே இல்லை.
தீதும்நன்றும் பிறர்தர வாரா என்ற வாசகங்கள் உலகநாடுகளிலும் போற்றப்படுகிறது என்பதே சான்றாகும்.
தமிழின் வளம்யாமறிந்த புலவரிலே கம்பனைப்போலவள்ளுவர்போல் இளங்கோவனைப்போல்
பூமிதனில் யாங்கரைமே கண்டதில்லைஎன்று பாரதி தமிழ் புலவர்களின் பெருமையை விதந்தோதுகிறார்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்இறவாத புகழுைடய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்என்ற வரிகள் தமிழில் மொழிபெயர்ப்பு நூல்களும் புதிதாக பல நூல்களும் இயற்ற வேண்டும். அப்போதுதான் தமிழ்மொழி மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும் என்று தன் தமிழ்க் காதலை வெளிப்படுத்தி உள்ளார் மகாகவி பாரதியார்.
தமிழ்கல்வி பயன்
தமிழ் கல்வி கற்றலால் அடையும் பயன் அளப்பறியது. தாய்மொழியில் கற்பதால் எளிமை, சுயசிந்தனை, புரிதல், ஆழமாக கற்றல், கலந்துரையாடல், விவாதித்தல், பேச்சு ஆற்றல், எழுத்தாற்றல் பெருகும். தமிழ்கற்றால் அதிகப்படியான வேலைவாய்ப்பினை பெறலாம். அரசு நடத்தும் பல போட்டி தேர்வுகளில் தமிழே முதன்மை பாடமாக விளங்குகிறது. இன்பத் தமிழ்க் கவிதை யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்துன்பங்கள் தீரும், சுகம் வரும், நெஞ்சில் தூய்மை யுண்டாகிவிடும், வீரம் வரும்.
என்று புரட்சிக்கவிஞர் தமிழ்க் கற்பதால் அடையும் நன்மைகளையும் பயன்களையும் விதந்தோதுகிறார்.உலக இலக்கியங்களில் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லாத சிறப்பு தமிழ் இலக்கியத்திற்கே உண்டு. இதனை உணர்ந்த மேலை நாட்டவர்கள் தாங்களும் தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் பல நூல்களை இயற்றியுள்ளனர்.
தரணியிரல் தலைசிறந்த தமிழ், இதில் இல்லாதன இல்லை, அகழ்வாைர தாங்கும் நிலவும்போலவும் வையதுள் வாழ்வாங்கு வாழ்ந்தும் வந்தால் வானுறையும் செய்வத்துள் வைக்கப்படுவர். தற்காலத்தில் தமிழகத்தில் தமிழ்வழிக் கல்விகற்றால் பல்வேறு வேலை வாய்ப்புகளையும், நிதி உதவிகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.