கோவை மாவட்டம் பொருத்தவரை, முதன்மை கல்வி அதிகாரி உஷா உள்பட அரசு பள்ளி ஆசிரியர்கள் பம்பரமாக சுழன்று தங்கங்களால் இயன்ற வரை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்கள் வழங்கி இக்கட்டான காலத்தில் ஆதரவு கரம் நீட்டி வருகின்றர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மதுக்கரை பகுதியில் உள்ள குரும்பபாளையம் அரசு பள்ளி சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட. அந்த பள்ளியில் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் குடும்பங்களுக்கு திங்களன்று மளிகை பொருட்கள் வழங்கினர். இதில் சிறப்பம்சமாக, சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள குரும்பபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் தாமாக முன்வந்து கொரோனா விழிப்புணர்வு பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். மாணவர்கள் முக கவசம் அணிந்தவாறு, கொரொனா குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும், தனி மனித இடைவெளி, தன் சுத்தம் உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்கள் எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்களே மளிகை பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினர். மாணவர்கள் இந்த சமூக பணி அனைவரும் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் 110 மாணாக்கர்களுக்கும் 15 துப்புரவு பணியாளர்களுக்கும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியன வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் காய்கறிகளும் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் மற்றும் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.