கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்திற்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கிளை அலுவலகம் நவம்பர் 6ம் தேதி அன்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் முன்னிலையில் துவக்கப்பட்டது.
இதற்கான பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் பேராசிரியர் செந்தாமரை, தற்போதைய மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் பசுபதி, கோவை மண்டல தலைவர் பேராசிரியர் திருநாவுக்கரசு, செயலாளர் பேராசிரியர் பூபதி, பொருளாளர் செந்தில்குமார், பாரதியார் பல்கலை முன்னாள் பதிவாளர் செந்தில்வாசன் உள்பட முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கோவை அண்ணா பல்கலை மண்டல வளாகத்திற்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கிளை அலுவலத்தின் தலைவராக பேராசிரியர் வெங்கடேஷ், செயலாளராக பேராசிரியர் விஜயபாஸ்கர், இணை செயலாளராக பேராசிரியர் நியூலின் ராஜ்குமார், பொருளாராக முனைவர் பாஸ்கரன் மற்றும் நிர்வாக செயல் உறுப்பினர்களாக பேராசிரியர் யுவராஜ், பேராசிரியர் சத்தியமூர்த்தி, பேராசிரியர் ரேணுகாதேவி, பேராசியர் மகாலட்சுமி ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்தில், கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தின் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.