ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்திர திட்ட அட்டவணையில் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்ற தேர்வர்கள் தகுதி தேர்வான டெட் தேர்வில் தோ்ச்சி பெற வேண்டும். அதன்பிறகே, ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும். ஆசிரியர் தோ்வு வாரியம் இத்தேர்வை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டெட் தேர்வு அறிவிப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர திட்ட அட்டவணையின்படி ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். இதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்த வேண்டும். ஆனால், இத்தேர்விற்கான அறிவிப்பு திட்டமிட்டப்படி வெளியாகிவில்லை. 2024ம் ஆண்டில் டெட் தேர்வு நடைபெறாத நிலையில், இந்தாண்டாவது நடைபெறுமா என தேர்வர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், தேர்வு நடத்துவது அறிவிப்பு இல்லாதது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இத்தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.