Art Teacher Welfare Association | கலை ஆசிரியர் சங்கம் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்

0
77
Art Teacher Welfare Association
Art Teacher Welfare Association

Art Teacher Welfare Association | கலை ஆசிரியர் சங்கம் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்

Art Teacher Welfare Association

இதுகுறித்து ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி தேர்தலில் நான்கு லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தபட்ட நேரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பு வராவிட்டால் நோட்டீஸ் அளிக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி இடம் இருந்து இதுவரை எந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு இதுவரை அனுப்பவில்லை. நான்கு லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் வாக்குகள் பறிக்கப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. இதற்கு கலை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.


நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கூறும் நிலையில் தபால் வாக்கு மொத்தத்தில் புறக்கணிக்கப்படுவதால் நான்கு லட்சம் வாக்குகள் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓட்டுகள் பதிவு செய்ய உடனடியாக தபால் வாக்கு சீட்டு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். நூறு சதவீதம் வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை தர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இடம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு உள்ளாட்சி தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்தது.  மாநில தேர்தல் ஆணையத்தின் கீழ் செயல்படும் மாவட்ட தேர்தல் தலைமை அதிகாரிகளுக்கு ஆசிரியர்கள் தபால் வாக்குகள் ஏன் வழங்கவில்லை என்று கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்து உள்ளது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.