SNMV College | எஸ்என்எம்வி கல்லூரியில் அப்துல்கலாம் நினைவு நாள்
ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படம் வைத்து செவ்வாயன்று அன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், கல்லூரி முதுல்வர் முனைவர் போ. சுப்பிரமணி அவர்கள் அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகளை கூறி அவற்றின் வழி வாழ்வில் செயல்பட்டு நம் முன்னேற்றம் மட்டுமின்றி சமூக முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக நிற்க வேண்டும் என உரையாற்றினார்.
மேலும், இவ்விழாவில் கல்லூரியின் மேலாண்மை துறை இயக்குனர், கல்லூரியின் மொழிப்புல தலைவர், பேராசிரியர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட அனைவரும் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.
