Annual Income For TN Government Hostel | அரசு விடுதியில் சேர ஆண்டு வருமானம் என்ன?
Annual Income For TN Government Hostel
அரசாணை எண் 50 - 25. 10.2021
2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் சேர்ந்து தங்கி பயிலும் வகையில் விடுதிகளில் மாணவ, மாணவியரின் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Read Also: Online admission for Adi Dravidar Hostels 2022 – ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர் சேர்க்கை
ஏற்கனவே, அரசாணை எண் 1, அரசாணை எண் 62ன்படி, பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளிலும், உணவு மானியம் பெறும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 39 தனியார் விடுதிகளிலும் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பினை ரூ. 50 ஆயிரத்திலிருந்து, ரூ. ஒரு லட்சம் ஆக உயர்த்தி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகள்
அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டு பத்தாண்டு மேலாகிவிட்ட நிலையில், இவ்விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையினை அதிகரித்து, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகள் மற்றும் உணவு மானியம் பெறும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 39 தனியார் விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பினை ரூ-1 லட்சத்தில் இருந்து ரூ- 2 லட்சம் ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.