தமிழக அரசு தனது இடைக்கால பட்ஜெட் நேற்று அறிவித்ததில், 6 முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் அறிமுகம் செய்யப்படும் என்ற ஒற்றை வார்த்தை மட்டும் இருந்தது. முழுமையான விளக்கம், செயல்பாடுகள், கணினி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு எந்த ஒரு விளக்கமும் பட்ஜெட் குறிப்பில் இல்லை என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுவும், இந்த அறிவிப்பு தேர்தல்யொட்டி வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள், ஒன்றாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்பிரிவை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு கணினி பாடத்தை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் கோரிக்கையாக முழங்கி வருகின்றனர்.
காரணம் என்ன?
முன்பு, மத்திய மனிதவள மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.900 கோடி நிதி கணினி அறிவியல் பாடத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதி அப்படியே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது மாநில அரசு. நிதியை மீண்டும் பெற 'பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் நிதியைப் பெற்று அந்த நிதியை 2019 ஆம் கல்வி ஆண்டில் தான் கணினி ஆய்வகம் அரசு பள்ளிகள் 540 கோடி கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டது.
இதனால் "அரசு பள்ளிகள் பின்தங்கவும், தனியார் பள்ளிகள் அசுர வளர்ச்சியும் பெற இதுவும் ஒரு காரணம். பல அமைச்சர்கள் மாறி, மாறி பதவிக்கு வந்த போதும், ஒரு மாற்றமும் இல்லை, ஏமாற்றம்தான் அதிகம் இருந்தது என்று வேதனை தெரிவிக்கிறார் ஒரு கணினி ஆசிரியர்.
ஒன்று வகுப்பு முதலே கணினி பாடம் என்ற கோரிக்கை வலியுறுத்தி, நூறு தடவைக்கு மேல் அமைச்சர், செயலர், இயக்குனா், முதல்வர் தனிப்பிரிவு என பல பேர் சந்தித்து வருடக்கணக்கில் மனு வழங்கியும், அவை கிடப்பில் அப்படியே பதிலற்று கிடக்கிறது.
தேர்தலின்போது மட்டும், கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும் கூறும் கட்சிகள், அதன்பின் எங்களை மறந்துவிடுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 40,000 பேர் பி.எட் பட்டதாாரிகள் வேலையின்றி பறிதவித்து வருகின்றனா், பொருளாதாரமும் அவர்கள் வாழ்க்கை நொடித்துவிட்டது என கணினி ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன் கூறும்போது, பட்ஜெட் தொடரில் வெளியான அறிவிப்பு நாங்கள் வரவேற்கிேறாம். அதே சமயத்தில், முறையான விளக்க கூறுகள் இல்லாததால், நாங்கள் பலத்த சந்தேகம் அடைகிறோம். எங்கள் அனுமானத்தின்படி, தமிழக அரசு 6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு
' டேப் (TAB)' மட்டும் வழங்கவிட்டு, பள்ளியில் உள்ள பிற பாட ஆசிரியர்களை வைத்தே அவர்களுக்கு பாடம் சொல்லிதரலாம், அதுக்காக பிற பாட ஆசிரியர்களுக்கு துறை மூலம் பயிற்சியும் நடத்தலாம்.
இந்த செயல்பாட்டால், அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த ஒரு கல்விசார்ந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை, மாறாக, நீதிதான் வீணடிக்கப்படும். கணினி ஆசிரியரின்றி, எப்படி பிற ஆசிரியர்கள் பாட நடத்த முடியும் என்பது எங்களது பெரும் கேள்வியாக உள்ளது. அப்படி அவர்கள் நடத்தினால், மாணவர்களுக்கு பயன் அளிக்குமா என்பது உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
குறைந்தபட்சம் இந்த பட்ஜெட் அறிவிப்பில், 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் தனிப்பாடமாக கொண்டு வரப்படும், செய்முறை வகுப்புகள் நடத்தப்படும், ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்ற தகவல் கூட இல்லை, என்றார்.
மேலும் அவர் கூறும்போது, அண்டை மாநில அரசுகள் கணினி கல்வியை தொடக்க வகுப்பு முதலே மாணவர்களுக்கு பயிற்று வருகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் கணினி பாடம் தமிழிலேயே வழங்குவது கூடுதல் சிறப்பு, அங்குள்ள தமிழ் மாணவர்களும் கணினி பயில்கின்றனர். இதேபோன்று தமிழகத்திலும் கணினி கல்வி தொடங்கப்பட்டு, பாதியிலேயே முடக்கப்பட்டது. இதனால், அச்சடிக்கப்பட்ட பல லட்சம் கணினி புத்தகங்கள் நாசகமாக்கப்பட்டன. குறிப்பாக, தனியார் பள்ளி நலச்சங்கத்தினர் அரசு பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வரக்கூடாது நேரடியாகவே அரசுக்கு கோரிக்கை வைத்தது எல்லாம் பெரும் அபத்தம்.
அப்போது, அரசு பள்ளி ஏழை மாணவனுக்கு கணினி கல்வி கிடைக்க கூடாது, கிடைத்தால் தனியார் பள்ளி நோக்கி யாரும் வரமாட்டார்கள் என்பதே இவர்களின் மன ஓட்டமாக உள்ளது. அரசும் இவர்களை சொல்வதுதான் கேட்கிறது. அரசு என்பது யாருக்கானது என்ற கேள்விதாள் எங்கள் மனதில் தோன்றுகிறது.
இன்றைய கால கட்டத்தில் கணினி சார் துறைகள் அசுர வளர்ச்சியில் உள்ளது, தனியாா் பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி சாதகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பெரும்பாலான தனியார் பள்ளிகள் தொடக்க வகுப்பிலேயே அவர்களுக்கு கணினி பாடங்களை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் மட்டும், மாணவன் 11ம் வகுப்புக்கு வந்த பிறகுதான கணினி என்றால் என்ன அடிப்படை புரிதலுக்கு வருகிறான்.
அதனால்தான், அவர்கள் உயர்கல்வியில் பல இடர்பாடுகளை சந்திக்கின்றனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை அடிப்படையாக கொண்டுதான், கணினி அறிவியல் பாடத்தை தொடக்க வகுப்பில் அறிமுகம் செய்தால், ஆசிரியர்களான நாங்கள் இலவசமாகவே மாணவர்களுக்கு பாடம் நடத்த தயராக இருக்கிறோம் என்று அரசுக்கு மனுவாக அனுப்பியிருந்தோம் அதனையும் இந்த அரசு நிராகரித்தது.
ஒன்றாம் வகுப்பு முதலே கணினி பாடம், மாணவர்களுக்கு தரமான கல்வி, நேர்முறையான முறையில் ஆசிரியர்கள் நியமனம் (குறைந்தபட்ச ஊதியமாக இருந்தாலும் பரவாயில்லை) உள்ளிட்டவை நிறைவேற்றம் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது. அது இந்த தமிழ்நாட்டில் நடக்குமா அல்லது நடக்காதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் எனவும், மற்ற அனைத்துதரப்பு ஆசிரியர் சங்கத்தினரும் எங்கள் கோரிக்கை வலியுறுத்து வேண்டும் எங்கள் நலனுக்காக அல்ல, மாணவர்கள் நலனுக்காக, இவ்வாறு அவர் வேதனையுடன் தங்களது வலிகளை பகிர்ந்துகொண்டார்.