டான்செட் நுழைவு தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்.டெக். எம்.பிளான் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு (டான்செட்) மூலம் நடைபெறுகிறது. இத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான டான்செட் தேர்வை எழுத எம்பிஏ படிப்புக்கு 21,789 பேர், எம்சிஏவுக்கு 6,197 பேர், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளாள் ஆகிய படிப்புகளுக்கு 10,152 பேர் என மொத்தம் 38,858 பேர் விண்ணப்பித்தனர்.
எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20ம் தேதியும், எம்இ, எம்ஆர்க், எம்பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21ம் தேதி நடந்தது.
இந்த நிலையில் டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலை
http://tancet.annauni.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.