அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சூரப்பா நியமிக்கப்பட்டார்.
அவர் அண்ண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுபேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் அவரின் பதவிக்காலம், வரும் 11ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை ஆளுநர் நியமித்துள்ளார். இதன்மூலம், துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இப்போது அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவின் தலைவராக வடமாநிலத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.