You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Anna University Engineering Counselling 2021 |அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு - 1.36 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு

Anna University Engineering Counselling 2021

Anna University Engineering Counselling 2021 Details|அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு - 1.36 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு

Anna University Engineering Counselling 2021

அண்ணா பல்கலைக்கழக பிஇ, பி.டெக் பட்டப்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கட்கிழமை தொடங்குகிறது.

அக்டோபர் 17ம் தேதி வரை நான்கு சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்கிறது மற்றும் 1.36 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள 404 பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டில் பிஇ மற்றும் பிடெக் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கடந்த ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் 1,74,490 மாணவ, மாணவியர்கள் பேர் விண்ணப்பித்தனர் மற்றும் 1,45,045 பேர் மட்டுமே கலந்தாய்விற்கான கட்டணத்தை செலுத்தியிருந்தனர்.

மேலும், 2,722 பேர் இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்யவில்லை. அவர்களையும் சேர்த்து 3,290 பேர் விண்ணப்பங்கள் தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து 1,39,033 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களில் பொதுப்பிரிவினர் 1,36,973 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதனால், அவர்கள் கலந்துகொள்ள வேண்டிய கவுன்சிலிங் அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இன்று பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இந்த கலந்தாய்வின்போது, கட்டணம் செலுத்த 2 நாட்கள், கல்லூரிகளை தேர்வு செய்ய 2 நாட்கள், தற்காலிக ஒதுக்கீட்டு உத்தரவுகளை உறுதி செய்ய 2 நாட்கள் இறுதி ஒதுக்கீட்டு உத்தரவுகளை உறுதி செய்ய 1 நாள் என ஒவ்வொரு சுற்றுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன், தொழில்கல்வி பிரிவில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடக்கிறது.

Anna University Engineering Counselling 2021 Time Table

ஒன்றாம் சுற்றில், ரேங்க் பட்டியலில் உள்ள 1 முதல் 14,788 பேர் பங்கேற்க உள்ளனர், இவர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதி நடக்கிறது

இரண்டாவது சுற்றில், ரேங்க் பட்டியலில் உள்ள 14,789 முதல் 45,227 பேர் பங்கேற்க உள்ளனர், இவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ம் தேதி வரை நடக்கிறது.

3வது சுற்றில், ரேங்க் பட்டியலில் உள்ள 45,228 முதல் 86,228 பேர் பங்கேற்க உள்ளனர், இவர்களுக்கு அக்டோபர் 5 முதல் 13 தேதி வரை நடக்கிறது.

4வது சுற்றில் மீதம் உள்ளவர்களுக்கு அக்டோபர் 9 முதல் 17 தேதி வரை நடக்கிறது.