Anbulla Akka | அன்புள்ள அக்கா | இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு வாழ்த்து செய்தி
Anbulla Akka
இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
கடந்த எட்டு மாதங்களாக நீங்கள் குழந்தைகளுடன் நெருங்கி பழகி வருகிறீர்கள். அவர்களுக்கு அன்புடன் அறிவை போதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
இல்லம் தேடிக் கல்வி குழந்தைகள் தன்னார்வலர்களுக்கு தங்களது நன்றி உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதங்களை இந்த வாரத்தில் எழுதலாம்.
Read Also: ITK Volunteers Role in SMC meeting
இதற்கான முயற்சிகளை நீங்கள் உங்களது மையங்களில் எடுங்கள். குழந்தைகள் என்ன எழுத விரும்புகிறார்களோ அதை அவர்கள் எழுதட்டும்!
இதற்காக இந்த வாரம் முழுவதும் இந்த தன்னார்வலர் குழுவில் அன்புள்ள அக்காவுக்கு... என்ற சிறப்பு வாரமாக கொண்டாடப் போகிறோம்.
குழந்தைகள் உங்களுக்கு எழுதும் கடிதங்களை படம் எடுத்து இங்கு (இல்லம் தேடி கல்வி டெலிகிராம் குரூப்) பகிரலாம்.
இதற்காக இன்று முதல் புகைப்படங்கள் அனுப்பும் வசதி இந்தக் குழுவில் ஏற்படுத்தப்படும்.
அனைவருக்கும் அன்பர்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.