தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் தெற்காசிய கல்வி மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.
மாநாட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெற்காசிய பகுதிகளை சேர்ந்த தைவான், ெகாரியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா நாடுகளை சேர்ந்த தூதரக தலைவர்கள், பிரதிநிதிகள், கல்வித்துறை அதிகாரிகளை வரவேற்றார்.மாநாட்டை தொடங்கிய வைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் ேபசியதாவது, நமது மாணவா்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பல்வேறு கலாச்சாரங்களை அனுபவிப்பது போல், தெற்காசிய நாடுகளின் மாணவா்களும் தமிழ்நாட்டின் கலச்சாரத்தை பார்வையிடவும் அவற்றை கற்றுக்கொள்ளவும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். மேலும் கல்வித்திட்டங்கள் மூலம் பிணைப்புகளை வலுப்படுத்துவது ஒரு தீவிர முயற்சியாக இருக்கிறது. இந்த மாணவர்கள் கல்வி பறிமாற்றத்தின் மூலம் தெற்காசிய நாடுகளுடன் நட்பை நாம் வலுப்படுத்த முடியும். தெற்காசிய நாடுகளின் தூதரகத் தலைவர்கள், பிரதிநிதிகள் இங்கு தங்கள் கல்வித்தொடர்பான திட்டங்களை தொடங்கும் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும். மாணவர்களே நீங்கள் உங்கள் அறிவை உள்வாங்கிக் கொள்ளுங்கள், சுறுசுறுப்பாக செயல்படுங்கள், நீங்கள் கற்றுக்கொண்டதை பகிர்ந்து கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.