Anbil Mahesh press meet today | எமிஸ் பணியிலிருந்து விடுதலை
Anbil Mahesh press meet today
பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் நிருபா்களிடம் கூறியதாவது, ஆசிரியர்களின் குறைகளை போக்கும் வகையில் புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக ஆசிரியர்கள் தங்களது குறைகளை புகாராக பதிவு செய்ய முடியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார். கொள்கை முடிவு சார்ந்த புகார்கள் என் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
2013ஆம் ஆண்டு டெட் தேர்வர்கள் குறித்து அவர் பேசும்போது ஆசிரியர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் அது டெட் தேர்வர்களின் உணர்வு, நாங்களும் தேர்தல் அறிக்கையில் கூறியதாகவும் தொிவித்தார். அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யக் கோரி தேர்வர்கள் தரப்பிலும், நீதிமன்றம் வாயிலாக அழுத்தம் வருகிறது. இதுதவிர பிற ஆண்டுகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒருபுறம் அழுத்தம் வருகிறது. 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்ச்சி பெற்றவர்கள் வரை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வழிவகை இருந்தால் முடிவுகள் எடுக்கப்படும். தற்போது, இது சம்மந்தமாக, துறை செயலரிடம் பேசப்பட்டுள்ளது. விரைவில் தெரிவிக்கப்படும்.
எமிஸ் பணி விலக்கு குறித்து கேட்டபோது, ஆசிரியர்கள் தங்களது மற்றும் மாணவர்கள் வருகைப்பதிவேடு பதிவு செய்தால் போதும், இந்த பணிக்காக 9 ஆயிரம் பேர் அதவாது மனித வளங்களை தயார்படுத்தி வருகிறோம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.