பாரத சாரண - சாரணியர் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்க வழங்கப்படும் வெள்ளி யானை சிலை மிக உயர்ந்த விருதாகும். அந்த வகையில், பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாட்டின் தலைவரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இந்த விருதினை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் வழங்க உள்ளார்.
இந்த தகவலை பாரத சாரண - சாரணியர் இயக்க தேசிய தலைமை ஆணையர் கே கே கண்டேல்வால் அறிவித்தார். பாரத சாரண- சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடந்தது. சிறப்பாக நடத்தியதற்காக கல்வி அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸடாலின் நிறைவு விழாவின்போது பாராட்டினர்.