Anbil Mahesh Latest press meet | கல்வித்துறையில் 32 வாக்குறுதிகளில் 29 நிறைவேற்றம்
Anbil Mahesh Latest press meet
பள்ளி கல்வித்துறை சம்மந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாெமாழி தெரிவித்தார்.
தூத்துக்குடி கோவில்பட்டியில் புதன்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 100 ஆண்டுகளை கடந்துள்ள பள்ளிகளுக்கு பழமை மாறாமல் புதுப்பிக்க தமிழக முதல்வர் ரூ25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார், என்றார்.
மேலும் அவர் தமிழ்நாட்டில் சுமார் 31,000 பள்ளிகளில் 17.50 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர் என கூறினார். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகிறது என்றும், முதல்வர் முடிவு எடுப்பார், இத்திட்டம் தெலங்கானாவில் செயல்படுத்துவது பெருமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சத்துணவில் கோவில்பட்டி கடலைமிட்டாய் சேர்ப்பது தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பள்ளி கல்வித்துறை சம்மந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் போராட்டங்களை பொருத்தவரை, அவர்களது உணர்வுகளை வௌிப்படுத்தும் நிகழ்வாகவே பார்க்கிறோம். நிதி நிலைமைக்கு ஏற்ப, அவர்களது ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்றார், அவர்.