Anbil Mahesh Latest Press Meet | பள்ளி திறப்பு எப்போது - கல்வி அமைச்சர் தகவல்
Anbil Mahesh Latest Press Meet
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024ம் ஆண்டு மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பமாகும்.
கோடைகால விடுமுறை முடிந்து வரும் 2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துஅறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும்.
2024ம் ஆண்டு மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பமாகும். 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2024ம் தேதி ஏப்ரல் 8ம் தேதி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.