பள்ளிகல்வித்துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோவையில் திங்கட்கிழமை தொிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியை தத்தெடுக்கும் நிகழ்வில் பள்ளி கல்விஅமைச்சர் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது, ஏற்கனவே எமிஸ் பணியை நிா்வகிக்க 6000 பேர் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் அவர் கூறும்போது, எமிஸ் பணிகளை நிர்வகிக்க கூடுதலாக ஆயிரம் பேர் விரைவில் ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும், இதனால் ஆசிரியர்கள் நிர்வாக பணிச்சுமை குறையும் என தெரிவித்தார்.