பள்ளி மாணவர்கள் மத்தியில் தலைமை பண்புகளை வளர்க்கும் வகையில், அரசு பள்ளிகளில் மாணவர் தேர்தல் நடத்தப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் சங்கத்தின் விழாவில் பங்கேற்ற அமைச்சர், ஞாயிற்றுகிழமை செய்தியாளர்களை சந்திதார்.Read Also: போதை பழக்கத்நிற்கு மாணவர்கள் எப்படி அடிமையாகிறார்கள்-அரசு பள்ளிகளில் கஞ்சா விற்கும் நிலை உள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, பள்ளி கல்வி அமைச்சர் கூறியதாவது, போதையில்லா கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி, போதை ஒழிப்பில் காவல்துறைக்கு மட்டும் பொறுப்பு இல்லை, கல்வித்துறைக்கும் அதிக பொறுப்பு உள்ளது.இதற்காக, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மத்தியில் தலைமை பண்புகளை வளர்க்கும் வகையில் மகிழ் முற்றம் செயல்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதவிர மாணவர் தேர்தல் பள்ளிகளில் நடத்தப்படும். இது அவர்களுக்கு தலைமை பண்பு வளர்க்கும், இவ்வாறு அவர் கூறினார்.