Anbil Mahesh Latest News | அன்பில் மகேஸ் பேட்டி
Anbil Mahesh Latest News
ஆசிரியர்கள் லேசாக கண்டித்தாலே மாணவர்கள் தவறான முடிவெடிப்பது வருத்தம் அளிக்கிறது என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் சென்னையில் தெரிவிதார்.
அவர் அளித்த பேட்டி, முன்பு ஒரு காலத்தில், பெற்றோர்களே ஆசிரியர்களிடம் தங்கள் குழந்தைகளை அடிக்க சொல்வது அக்கறையின் காரணம். அதேபோல், ஆசிரியர்கள் மாணவர்களை உரிமையுடன் திட்டுவார்கள், அடிப்பார்கள் அது ஆசிரியர்கள், மாணவர்கள் உறவாக இருந்தது.
ஆனால் தற்போது மாணவர்கள் நிலை மாறியுள்ளது. குறிப்பாக, விடலை பருவத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் திட்டினால் உடனே அதற்கான முடிவை எடுக்கிறார்கள். இது வருந்தக்கதாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே 800 மருத்துவர்கள் மாணவா்களுக்கு உாிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.