Anbil Mahesh Latest News | கலைஞர் அறிமுகப்படுத்திய திட்டத்தை மறந்த அன்பில் மகேஸ்
Anbil Mahesh Latest News
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவரது ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையில், கணினி அறிவியல் பாடத்தை 6 முதல் 10ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமின்றி, பள்ளிகளில் கணினி பாடத்தை அமல்படுத்த வேண்டும் உத்தரவிட்டதோடு மட்டுமின்றி, 50 லட்சம் அச்சிடப்பட்ட பாடபுத்தகங்களையும் பள்ளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.
அந்த சமயத்தில், வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்கள் மனதில் ஒரு விதமான வண்ண ஒளி பிறந்தது, நமக்கும் அரசு வேலை உண்டு, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றலாம் என்று நம்பிக்கையும் மனதில் உதித்தது. ஆட்சி மாற்றம் பின், கணினி அறிவியல் பாடத்திட்டம் அடியோடு முடக்கப்பட்டு, புத்தகங்கள் அழிக்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரிகள், அதனை நம்பி படித்து கொண்டிருந்தவர்களுக்கு இது பேரிடியாக இருந்தது.
அன்று முதல் ஆரம்பித்தது கணினி ஆசிரியர்களின் போராட்ட வாழ்க்கை.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணினி ஆசிரியர் குமரேசன், தமிழகம் முழுவதும் வேலையில்லா கணினி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து இன்று வரை கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சி இறுதி காலத்தில் கூட, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் தொடங்க அறிவிக்கை வெளியிட்டு, பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்தது. அதிகாரிகள் அலட்சியத்தால் கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபின், கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால், ஏமாற்றம்தான் அவர்களுக்கு மிஞ்சியது.
அமைச்சர் குழப்பம்
இந்த நிலையில், செய்தியாளர்களை இன்று சந்திந்த அமைச்சர், நிருபர் ஒருவர் கணினி அறிவியல் பாடதிட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார், தற்போது அரசு பள்ளிகளில் (6 முதல் 10 என நிருபர் சொல்ல மறந்துவிட்டார்) இல்லை, வேலையில்லா கணினி ஆசிரியர்கனின் கோரிக்கையான கணினி பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதா என்று கேள்விக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் ஒரு நிமிடம் தடுமாறினார்.
மேலும், கலைஞர் கொண்டு வந்த கணினி பாடத்தையும் மறந்துவிட்டார் என்பதும் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிந்தது. மேலும் எந்த கணினி பாடம் என்று அவர் நிருபர்களிடம் கேட்டது, கணினி ஆசிரியர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கலைஞர் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடம் குறித்து அவருக்கு தெரியவில்லை என்பதே அவர் பதில் காட்டுகிறது.
அந்த கேள்விக்கு மேலும் அவர் கூறும்போது, கணினி பாடத்திற்கான (பிளஸ் 1, பிளஸ் 2) ரூ.200 மாணவர்களிடம் வாங்குவதை கூட கடந்தாண்டு ரத்து செய்துவிட்டோம் என்றும், நீங்கள் எந்த கணினி அறிவியல் பாடத்தை கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை என்றும் நிருபரிடம் கூறினார். மேலும் அமைச்சர் அதை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த காணொளி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து எழுப்பப்படும் கோரிக்கை குறித்து அமைச்சருக்கு தெரியவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.